சாவாதிருக்கும் வழியும் ....தெரியாத
அறிவு என்ன அறிவோ ?
-மாணிக்க வாசகர் .
சமீபத்தில் ,ஒரு திருமண மண்டபத்தில் ஆன்மீக கூட்டம் நடந்தது .
தலைப்பு -மரணத்தை வெல்லும் வழிகள்...
வித்தியாசமான தலைப்ப்யு.மனிதன் சாகாமல் வாழமுடியுமா.அதற்க்கு ஒருவர் கற்று தருகிறாரா?என ஆச்சர்யமுடன் சென்றேன்.
அந்த ஆன்மீகவாதியின் பெயர் ,ஞான தேவ பாரதி சுவாமிகள் .பழனியில் ஆசிரமம் அமைத்து உள்ளார் .பணம் சம்பாதிப்பதில்லை.தன் ஆசிரமத்தில் யாருக்கும் அனுமதிப்பதில்லை .தனது ஆன்ம பயிற்சிக்கு அந்த ஆசிரம த்தை பயன்படுத்துகிறார் .
மரணத்தை வென்றவர்.சிவ தரிசனம் கண்ட ஞானி என்று சொல்கிறார்கள் .
இருபது நாட்கள் மலம் ஜலம் கழிக்காமல் பத்துக்கு பத்து இருட்டு அறையில் ஆன்ம பயிற்சி செய்தவர் என்கிறார்கள்;
- அவர் உரையிலிருந்து முக்கியமான கருத்துக்கள்;
- மனிதனின் விந்து வீண் ஆனால் விழி ஒளி போகும் ;நல்லது கெட்டது அறியும் புத்தி போகும் ;
- ஆஞ்சநேயர் -அணுவின் ஆற்றலை உணர்ந்த மகான் .அணு ஆற்றலைமுதன் முதலில் பயன்படுத்தியவர்.விந்தாற்றல் தனை கட்டி வின் அதிர செய்தவர்
- தேகத்தை பொன் ஆக்கினால் நீ கை பட்ட தெல்லாம் பொன் ஆகும் ;
- அஞ்சாதிருந்தால் ஆயுள் வளரும் .
- மகான்கள் விதியை மீறி நம்மை காப்பர் .தெய்வம் விதியை மீறுவதில்லை ;
- விவேகானந்தர் கடைசி வரை மாமிசம்,புகை பழக்கத்தை விடமுடியாமல் ,நீரிழிவு வந்து இறந்தார் ;
- தெய்வம் -சிறு நெறி வழிபாடு ;
- மகான்கள்-பெருநெறி வழிபாடு ;
- வயதாகி கண்கள் நீர் வற்றி ,யார் எதிரில் நின்றாலும் கருப்பு வட்டம் மட்டுமே தெரியும் ;இதுவே யமன் நிற்கிறான்.வந்துவிட்டான் என சிலர் மரண தருவாயில் கத்துவார் ;இருள் தான் எமன் வாகனம் .இதனால் எருமையை குறிக்கிறோம் .
- சாவை தீர்த்தவர் தான் சாதித்தார் .சாதனை என்பதும் சாவை வென்றவரையே குறிக்கும் சொல் ஆகும் ;சாவுக்கு உரிய தீ சாதி .;
- மரணமில்லா பெருவாழ்வு வாழ முடியும் என சத்தியம் சொல்கின்றேன் என்றார் வள்ளலார் .அதை பற்றி யாரும் அக்கறை கொள்ளவோ ,ஆய்வு செய்து அவர் சொல்படி வாழ்வை அமைத்து கொள்ளவோ யாரும் விரும்ப வில்லை .;
- ஆன்மாவை சமாதானபடுத்தி இறை நிலை புரிய வைப்பதே ஆன்மிகம் ஆகும் .
- மாணிக்க வாசகர் ஆன்மாவை நேசித்தார் வள்ளலார் .படம் வைத்து வணங்க வில்லை ;
- ஆலய வழிபாடு செய்தவர்கள் யாரும் மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்ததில்லை ;
- மனம் அடிமையாகும்,திருட வைக்கும்,நடிக்க செய்யும் -ஆக ஆன்மீகத்திற்கு உதவாது; ஆன்மா நிலையானது .ஆன்மாவையும் ,மனதையும் ..ஜீவ காருண்யம் (பிற உயிர்களை தன் உயிராய் நேசிப்பவர் )மாத்திரமே பிரித்து புரிந்து கொள்ள இயலும் .
VAALA